1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:10 IST)

சிவகரந்தை மூலிகையின் மருத்துவ பயன்கள் என்ன...?

Sivakaranthai
சிவகரந்தை, அதிக மருத்துவ குணம் கொண்ட அரியவகை மூலிகைச் செடியாகும்.. மிகுந்த வாசனை கொண்ட சிவகரந்தை, சிறுசெடி வகையைச் சார்ந்தது. சிவகரந்தை மூலிகையின் தண்டு, இலை, பூ, வேர், விதை என அனைத்துமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை.


சிவகரந்தை என்னும் இந்த மூலிகை வாந்தி, சுவையின்மை, ஆண்மைக் குறைவு , கரப்பான் எனப்படும் தோல் நோய் , இருமல் போன்றவற்றை நீக்கும் . பசியை உண்டாக்கும்.

சிவகரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். சிவகரந்தை பொடி விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கும்.

சிவகரந்தை பொடி பசியை தூண்டும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும். சிறு நீரகம் சம்பந்தமான நோய்களை நீக்கும். மஞ்சள் காமாலை நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பாதுகாக்கும் மற்றும் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்டது.

சிவகரந்தை இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து பாதியாக வற்றிய பின்பு வடிகட்டி, அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாட்கள் குடித்துவர கல்லீரலில் தோன்றும் கிருமித்தோற்று நீங்கும்.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ஞாபகத் திறனை அதிகரிக்கும்.மேலும் எல்லா வகையான ஜுரங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.