செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (09:42 IST)

வெள்ளை முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

முள்ளங்கியில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கி, சிகப்பு முள்ளங்கி போன்ற பல பல வகைகள் உள்ளன.

 
வெள்ளை முள்ளங்கியில் நமது இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள்,
தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. முள்ளங்கி சாறு மூல நோயை குணப்படுத்தும். முள்ளங்கியை நன்றாக வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் முழுவதுமாக கரையும்.
 
முள்ளங்கியை நாம் சமைத்த பிறகோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாக வெள்ளை முள்ளங்கி விளங்குகிறது.
 
முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும். மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை சரி செய்யும்.
 
முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மூலநோய், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
 
முள்ளங்கியை சேர்த்துக்கொள்வதால் சிறுநீர் நன்கு வெளியேறும். இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும்.