வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (11:41 IST)

அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்த்துக்கொள்வதன் பயன்கள் என்ன...?

White onion
வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம்,  மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது.


புற்று நோயை எதிர்க்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது. வயது முதிர்வு காரணத்தால் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

வெள்ளை வெங்காயம் மனஅழுத்தத்தை குறைத்து நல்லதொரு தூக்கத்தை வரவைக்கிறது. செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை தினமும் எடுத்து வந்தால் செரிமான கோளாறுகள் படி படியாக குறையும்.

வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம். உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது.

இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் முடியில் உள்ள பொடுகு போன்றவற்றை அளிக்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது.

காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் தலைவலி உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலையில் தேய்த்தால் 8 மணி நேரத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி காணாமல் போய்விடும்.