ஆசனங்களை செய்யவேண்டிய முறைகளும் அதனால் கிடைக்கும் பலன்களும்....!!

Yoga
Sasikala|
காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களை செய்யவேண்டும். காலை கடன்களை முடித்துவிட்டி 10 நிமிடம் கழித்து ஆசனங்களை செய்யத் துவங்கவேண்டும். குளிப்பதற்கு முன்போ அல்லது பின்போ ஆசனங்களை செய்யலாம். ஆனால் கட்டாயம் அரைமணி நேரம் இடைவெளி  இருப்பது அவசியம். 
குளிர்ந்த நீரில் குளித்த பிறகு ஆசன பயிற்சி செய்தால், உடலை வளைப்பதற்கு சுலபமாக இருக்கும். சுத்தமான காற்று நிறைந்த தூய்மையான  அறை யோகாப் பயிற்சிக்கு சிறந்தது. அல்லது இயற்கை காட்சிகள் உள்ள இடம் பூங்கா, பூந்தோட்டம், அருவி, நதிக்கரை போன்ற நீர் நிலைகள்  இருக்கும் இடங்களில் பயிற்சி செய்து வந்தால் இன்னும் அதிகமான பயன் கிடைக்கும். 
 
பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. மேடு பள்ளம் இல்லாத தரையில் போர்வை அல்லது யோகா மேட் விரித்து அதன் மேல் தான் பயிற்சி செய்யவேண்டும், கட்டிலின் மீதோ, மெத்தையின் மீதோ இருந்து கொண்டு பயிற்சி செய்வது தவிர்க்கப்படவேண்டும்.
 
இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ஆசனங்களை செய்யக்கூடாது. ஆசனங்களை பயிலும்போது நம் மனதை அதில் முழுமையாக ஈடுபடுத்தி உற்சாகத்துடன் செய்ய வேண்டும். மனதினில் வேறு வேலைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு ஆசனங்களை செய்தால்,  ஆசனத்தினால் உண்டாகும் முழு பலனையும் பெற முடியாது.
 
ஆசனங்களை செய்யவேண்டிய முறை: ஆசனங்களை வேகமாக, அவசரத்துடன் செய்யக்கூடாது. நிதானமாக உடல், மனம், மூச்சு இவை மூன்றும் ஒன்றித்த நிலையில் ஆசனங்களை செய்ய முயற்சிக்க வேண்டும்.
 
ஆரம்பத்தில் ஒவ்வொரு ஆசனத்தையும் ஒரு சில வினாடிகள் செய்தாலே போதும் தொடர் பயிற்சியின் மூலம் உடலின் ஆற்றலுக்கு ஏற்ப நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்த வேண்டும். இவற்றை மனதில் நிறுத்தி ஆசனங்களை செய்தால் மட்டுமே முழு பலன்  கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :