திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட உணவில் எள் சேர்ப்பதால் என்ன பயன் தெரியுமா...?

எள்ளில் இருக்கும் செம்பு, கால்சியம், மெக்னிசியம் சத்துக்களால் மூட்டுகளில் உண்டாகும் வலியை எளிதாக சீர் செய்கிறது. இதில் உள்ள செம்பு சத்தானது இரத்த குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை அதிக படுத்துகிறது. இதனால் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள  உதவுகிறது. 
எள்ளில் வைட்டமின் எ மற்றும் பி இரும்பு சத்துகள் அதிகமாக இருப்பதால் இளநரை, முடி கொட்டுதல், மற்றும் நியாபக மறதி போன்றவற்றை விரைவாக குணப்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சு பொருள்கள் மற்றும் கழிவு பொருள்களை எளிதில் வெளியேற்றுகின்றது. இதன் மூலம் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள எள் ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. 
 
எள்ளில் மெக்னீசியம் ஒமேகா 3 கால்சியம் பாஸ்பரஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் உள்ளது. கருப்பு எள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து, மூளை செல்களை அதிகமாக உருவாக்குகின்றது.
 
எள்ளில் உள்ள செசாமின் என்ற பொருளே உடலில் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கின்றது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதில் எள் முக்கிய பங்களிக்கிறது. இரத்த நாளங்களில் வளரும் புற்றுநோய் செல்களை அழித்து பெருங்குடல் மற்றும் கல்லீரலில்  உண்டாகும் புற்றுநோய்களை தடுக்கின்றது. 
 
எள் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெகுவாக கரைக்கிறது. அதோடு இல்லாமல் மாதவிடாய் சமயங்களில் தோன்றும் வயிறு வலி மற்றும்  உடலில் உண்டாகும் அனைத்து விதமான வலிகளையும் எள் சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்தலாம். 
 
வெள்ளை மற்றும் கருப்பு எள்களில் கருப்பு எள்ளே சிறந்தது. ஏனென்றால் இதில் மட்டும் கால்சிம் 60% அடங்கியுள்ளது. அதே போல் எள் அதிகமாக எடுத்து கொள்ளாமல், தினசரி உணவில் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தி வந்தால் வளமான வாழ்வை பெறலாம்.