வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (10:04 IST)

அன்றாட உணவில் இஞ்சியின் அற்புத நன்மைகள் !!

Ginger
இஞ்சிச் சாற்றில் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து, சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.


இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால், வாந்தி உடனே நிற்கும்.

சுறுசுறுப்பை மேம்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் சரியான நேரத்தில் இஞ்சி உங்களுக்கு கைகொடுக்கும்.

மாதவிடாய் தசை பிடிப்புகளுக்கு தோல் நீக்கிய இஞ்சியை பயன்படுத்தி சூடான இஞ்சி தேநீர் குடிக்கலாம்.

வயிறு கோளாறு, வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமையான நிவாரணம் அளிக்கும்.

உடலும், மனதும் சோர்வாக இருக்கும் போது இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் புத்துணர்ச்சி தானாக வரும்.

இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்துக் காயவைத்து எடுத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும்.