1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Nutrients rich in easily available greens !!

எளிதாக கிடைக்கும் கீரைகளில் நிறைந்துள்ள சத்துக்கள் !!

உடல் ஆரோக்கியம்
கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும். வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும். பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இருமல் மற்றும் நெஞ்சில் தீராத சளியா?