வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (08:45 IST)

இளமையைக் கொடுக்கும் இளநீரின் அற்புத பயன்கள்..!

Tender Coconut
கோடைக்காலம் வந்தாலே தாகம் தணிப்பதில் முதல் இடம் வகிப்பது இளநீர். இது வெறும் தாகம் தணிக்கும் பானம் மட்டுமல்ல. ஏராளமான சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் கொண்ட இயற்கை அளித்த கொடை. அதன் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்..


 
  • இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • கோடைக்காலங்களில் இளநீர் குடிப்பது உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • தினம் ஒரு இளநீர் குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குணமாகும்.
  • இளநீரில் உள்ள நீர்ச்சத்து தோல் வறட்சியைப் போக்கி முகப்பரு உள்ளிட்டவை வராமல் தடுக்கிறது.
  • கோடைக்காலங்களில் உடல் வறட்சியால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் இளநீர் குடிப்பதால் சரியாகும்.
  • இளநீரில் உள்ள லாரிக் அமிலம் தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் காப்பதால் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது.
  • இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகளைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்துகிறது.