1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Strengthen your heart It will work smoothly Custard Apple....!

இதயத்தைப் பலப்படுத்தி சீராக இயங்க செய்யும் சீதாப்பழம்....!

சீதாப்பழம்
சீதாப்பழச்சாறுடன் எலுமிச்சம்பழச்சாறு, தேன் கலந்து மிக்சட் பானம் தயாரித்தும் சாப்பிடலாம். பழத்தின் சதைப் பாகத்தைத் தனியாக எடுத்து சாப்பிடுவதுதான் அதிகமாக வழக்கத்தில் உள்ளது.
பலவகை இனிப்புகளும் செய்து உண்ணலாம். பொதுப் பயன்கள் சீதாப்பழச்சாறில் பல வகை பண்டங்கள் பானங்கள் தயாரிக்கப்படுகிறது. காண்டி, சாக்லெட், மிட்டாய், கேக், பிஸ்கெட்கள் செய்ய உதவுகிறது. சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும்.
 
சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திம நிலை காசநோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர,  நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
 
சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும். கோடை உபாதைகள் எட்டிப் பார்க்காது.
 
மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும். தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால், ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால், உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.
 
அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள்
விரைவில் ஆறும். சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும்.
 
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும்.  நீர்க்கடுப்பும் நீங்கும்.
அடுத்த கட்டுரையில்
பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியவை....!