1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நட்சத்திர பழம் !!

நட்சத்திரப் பழத்தின் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

* பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
 
* அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திரப் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.
 
* நட்சத்திரப் பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை பலப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்டு நல்ல பலனைப் பெறலாம்.
 
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு  உண்டு.
 
* நட்சத்திரப் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. நட்சத்திரப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.