ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் புதினா எண்ணெய் !!

புதினா எண்ணெய் வாயு, நெஞ்செரிச்சல், வயிறு வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

புதினா எண்ணெய் ஒரு இயற்கையான கார்மினேட்டிவ் ஆகும். எனவே இது வயிற்று தசைகளை தளர்த்தி, வாய்வு தொல்லையை  நீக்குகிறது. 
 
புதினா எண்ணெய் குளிர் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்படும் போது, சுவாசிக்கையில் காற்றை உள்ளிழுக்கும் போது வீக்கமடைந்த நாசிப் பாதைகளுக்கு  இதமளிக்கிறது. 
 
புதினா எண்ணெய் தலைவலிக்கு இயற்கையான தீர்வாகும். புதினா எண்ணெயில் உள்ள மெந்தால் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது.
 
புதினா எண்ணெய் தசைகள் வலி மற்றும் கடினமான மூட்டு வலிகளுக்கு தீர்வளிக்கிறது. வலி நிவாரணி பண்புகள் வலியைக் குறைக்கவும் நிவாரணம் வழங்கவும்  உதவுகின்றன. 
 
புதினா எண்ணெயின் இனிமையான நறுமணம் உடலையும் மனதையும் தளர்த்த உதவும். இது அத்தியாவசிய எண்ணெய்கள் போல மன அழுத்தத்தைக் குறைக்க  உதவுகிறது. 
 
புதினா எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதை போலவே, தோலுக்கும் புத்துணர்வான உணர்வை கொடுத்து ஆரோக்கியமாக்க செய்கிறது.