வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தரும் முளைவிட்ட தானியங்கள்...!

முளைவிட்ட தானியத்தில் ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது. முளைவிட்ட பயிரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி பிறக்கும். முளைக்கட்டிய தானியத்தில் பாசிப்பயிறு, சோளம், கொள்ளு போன்ற தானியங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.
தானியங்களை முளைக்கட்ட பாசிப்பயிறை, சாப்பிடக்கூடிய அளவில் எடுத்து, காலையில் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். இரவு கைக்குட்டை  அளவுள்ள பருத்தி துணியில் சுற்றி, முடிச்சுப் போட்டு வைக்க வேண்டும். மறுநாள் பார்த்தால், முளைவிட்டு வளர துவங்கியிருக்கும்.
 
காலையில் வெறும் வயிற்றில், இதை உட்கொள்வது மிகச்சிறந்தது. இதை சாப்பிட்ட பின், அரை மணிநேரம் கழித்து தான், தேநீர் அல்லது மற்ற உணவுகளை  உட்கொள்ள வேண்டும்.
 
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடின வேலை செய்பவர்கள் அதிகம் உட்கொள்ளலாம். இதனால், சக்தி குறையாமல் பார்த்துக்  கொள்ளலாம்.
 
முளைவிட்ட கருப்பு உளுந்து, தாய்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளை விட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமனை குறைத்து மூட்டு வலியை நீக்கும்.
 
தினமும் இதை சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவாகும். எலும்புகள் வளர்ச்சியுறும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
 
இதன் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்பு தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1, பி2 போன்றவை  அதிகளவில் கிடைக்கிறது.
 
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளை விட்ட கோதுமை சாப்பிட்டால், புற்று நோய் தாக்கத்தை குறைக்கும்.  முளை விட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியாக இருப்பவர்களுக்கு பருமன் கூடும். கண்பார்வை பலப்படும்.