வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

யாரெல்லாம் பூண்டை உணவில் சேர்த்து கொள்ளக்கூடாது ஏன்...?

ஆரோக்கியமான உணவுகள் கூட ஒருசில சமயங்களில், உடல் நலக்குறைபாடு உள்ளவர்களுக்கு தீய விளைவுகளை உண்டாக்கும் வாய்ப்புண்டு. அந்த வகையில்  பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என அறிவுரைத்தப்படுகிறது.
தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால், உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
 
கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது கல்லீரல் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் தாக்கத்தை  குறைக்க செய்கிறது.
 
வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப் போக்கை  அதிகப்படுத்தும்.
 
கண் சார்ந்த நோய் மற்றும் கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண்டை சேர்த்து உணவை சாப்பிட்டால் கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய வாய்ப்புகள்  உள்ளது.
 
அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளப்போகும் நபர்கள், இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.
 
பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. எனவே குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்துவிடுவது நல்லது.