ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெங்காயத்தாளில் நிறைந்துள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும்.


வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள்  நிறைந்துள்ளன. 
 
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் கண்நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
 
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. 
 
வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும்  வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
 
வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு  நிவாரணம் கூட வழங்குகிறது.
 
வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. வெங்காய தாளானது  புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.