அடிக்கடி வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

Varagu
Sasikala|
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.. ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில் மிகுதியாக  உள்ளது.
 
வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
 
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.
 
வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.
 
வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரமொருமுறை வரகரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.  உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு.
 
வரகரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :