செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:34 IST)

சில பயன் தரும் இயற்கை அழகு குறிப்புகள் !!

தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும்.


வேப்பிலை புதினா சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முகம் வேர்க்குரு வராமல் வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லீற்றர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் கோழி முட்டையில் கொஞ்சம் சக்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக் கொண்டு பிறகு தலைக்கு கூறிற வேண்டும். இதனால் எண்ணெய்ப் பசை நீங்கி முடி அழகு பெறும்.