1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (14:40 IST)

சரும வறட்சியை போக்குவதற்கான மிகச்சிறநத தீர்வு எது தெரியுமா...?

பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறநத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.


மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்கும் தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்கும் தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.

ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும்.

எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை பழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாமல், அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.