வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பேன் தொல்லையை இயற்கை முறையில் சரிசெய்ய சில டிப்ஸ் !!

வெங்காயச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப் மூலம் கவர் செய்ய வேண்டும். பிறகு முடியினை அலசும்போது பேன் தானாக வெளியேறிவிடும்.

வேப்ப எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்களுக்கு தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை மற்றும் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு ஆகியவை நீங்கும்.
 
வேப்பிலையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசினால் பேன் நீங்கிவிடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்யலாம்.
 
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.
 
சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்கு சூரிய வெப்பத்தில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்துவைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.
 
குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை, பேன் தொல்லை நீங்கும்.