செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடி வளருவதில் உதவும் சில உணவுகளும் பயன்களும் !!

மீனில் உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது தற்காலிகமான முடி உதிர்வை தடுத்து நிறுத்துகிறது. மேலும் முடி நன்றாக வளர உதவுகிறது.

முடியை அதிகமாக வளர செய்ய சைவப்பிரியர்கள் கருப்பு சுண்டல், பச்சை பாட்டாணி போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க், பயோடின்  ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் உள்ள விட்டமின் பி முடி வளருவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
 
கீரை வகைகளை சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பச்சை கீரைகளில் அதிகளவு விட்டமின் சி மற்றும்  ஏ அதிகளவில் அடங்கியுள்ளது.
 
நட்ஸ் உங்களது மூளைக்கு மட்டுமில்லாமல் முடிக்கும் சிறந்தது. பாதம் மற்றும் பிற நட்ஸ்களில் ஒமேகா 3-யின் நன்மைகள் பல அடங்கியுள்ளன. இவை முடியை  கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளர வைக்கின்றன.
 
ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை உணவில் சேர்த்துக்கொள்வது முடியை ஆரோக்கியமாக வளர வைப்பதோடு, இதில் கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது.
 
முடி வளர்வதற்கு பால் பொருட்கள் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பால் அல்லது தயிர் எடுத்துக்கொள்வது முடியை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளர வைக்கும்.