திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

விரல் நகங்களை பாதுகாக்க இயற்கை முறையிலான சில குறிப்புகள்...!!

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது போலவே கை, கால்களில் இருக்கும் நகங்களுக்கு எண்ணெய் வைக்கவேண்டும். இது அவைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
உங்களுக்கு நகம் மெதுவாக வளர்கிறதா? அல்லது சீக்கிரம் உடைந்து விடுகிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நலக் குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
 
தினமும் கைகளை எண்ணெய்யில் சிறிது நேரம் வைத்து கொள்வதால் நகங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
 
வைட்டமின் இ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி6 அதிக அளவிலே காணப்படுவதால் நகங்களில் உறுதிக்கு பயன்படுகிறது.
 
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலம் சரும கோளாறுகள் மற்றும் நகங்களில் மாற்றம் ஏற்படும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் தானிய வகைகளை உட்கொள்ளுவதால் நக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
 
கைகளை கழுவ நாம் உபயோகிக்கும் சோப்பு மற்றும் இதர பொருட்களின் தாக்கத்தினால் நகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
பாத்திரங்களை கழுவுதல் போன்ற வேலைகளை செய்வதால் கைகளில் தொற்றுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க கைகளில் பாதுகாப்புக்கு என உறை அணியலாம். மேலும் விரல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து சுத்தமாக வைத்து கொள்வது அவசியமாகும்.
 
தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை வெதுவெதுப்பாகச் சூடு செய்து, உங்கள் விரல் நகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 நிமிடம் மசாஜ் செய்வதால் அழகான நகம் வளர்வது உறுதி.
 
எலுமிச்சை உபயோகிப்பதால், சிலருக்கு விரல்களில் இருந்து ஏற்படும் துர் நாற்றம் உடனடியாக நீங்கும்.