வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

சருமமும், தோலும் எப்போதுமே ஈர்ப்பதுடன் இருக்க ஆமணக்கு எண்ணெய்யை பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவார்கள். இதில் உள்ள வைட்டமின்கள் நேரடியாகவே செல்களை புத்துணர்வூட்டி சிறப்பான அழகை தருகிறதாம்.
பூமியில் இருந்து கிடைக்கப்படும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. இதுவும் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான். இதை இயற்கை சந்தனத்துடன் சேர்த்து பயன்படுத்துவதால், இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள்  போன்றவற்றை தடை செய்துவிடும்.
பெண்கள் இந்தமுறையிலான அழகு குறிப்புகளை  பயன்படுத்தி தான் முக அழகை எளிதாக பெறுகின்றனர். இதற்கு தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் 2 ஸ்பூன், கோதுமை மாவு அரிசி மாவு 1 ஸ்பூன், மஞ்சள் பொடி 1 ஸ்பூன்.
 
தயாரிப்பு முறை: முதலில் கோதுமை மாவை மஞ்சளுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி  வந்தால் முகம் பளபளப்பாகும்.