1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (17:10 IST)

அதிகாரிகளை இடித்து தள்ளிவிட்டு ஓடிய பெண் : பரவலாகும் வீடியோ

வடகொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம்ஜாங் ஆகிய இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்கு அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பின் போது அனைத்து மீடியாக்களும் குழுமியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முக்கியமாக அமெரிக்காவின் புதிய பத்திரிக்கையில் செய்தியாளர் ஸ்டீபனி  கிரிஷாம் என்பவர் இரு நாட்டு அதிபர்கள் பேசுவது  பற்றிய  செய்திகள் சேகரிக்குமாறு  தன் நாட்டு செய்தியாளர்களிடம் கறும் போது  அங்கிருந்த அதிகாரிகளை அவர் தள்ளிவிட்டது தான் தற்போது வைரலாகிவருகிறது.
 
இந்த சந்திப்பின் போது, செய்திகள் சேகரித்துக்கொண்டிருந்த யு.எஸ் பிரஸ் பூல் உறுப்பினர்களுக்கும், வடகொரிய பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் மேலிட்டது. அதனால் அமெரிக்க ஊடகங்களை செய்தி சேகரிக்க விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர். அப்போது அங்கு நுழைந்த ஸ்டிபனி கிரிஷாம் அமெரிக்க செய்தி ஊடகங்கள் நுழைய வழி செய்தார். இந்த காட்சிதான் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. கிரிஷனை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது தொடர்பாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.