வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தலைமுடி பராமரிப்பில் எலுமிச்சையை பயன்படுத்தி சில டிப்ஸ்...!

நம் வீட்டில் உள்ள ஒரு அற்புதமான பொருளைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுல்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.
 
எலுமிச்சை சார்றை நேரிடையாக தலையில் தடவுவதால் அவை ஸ்கால்பில் எரிச்சலையும், அரிப்பையும் உண்டாக்கும். அதனால் எலுமிச்சை  சார்றினை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அதுவும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை மைல்டு ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலையில்  தேய்த்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் தலைமுடி நன்கு பொலிவோடு இருக்கும்.
 
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1  மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.
 
பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்ய, எலுமிச்சை சாற்றினை தேன் மற்றும் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி  நன்கு தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.
 
ஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன்  கிடைக்கும்.
 
எலுமிச்சை சாற்றினை வேப்பிலையுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகு நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட பூஞ்சை  தொற்றுக்களும் அகலும்.
 
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, தலைமுடி மற்றும்  ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு  ஒருமுறை செய்து வர, தலைமுடி பொலிவோடு இருப்பதுடன், தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.