புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

ஹேர் கலரிங் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை....!!

ஹேர் கலரிங் செய்வதற்கு முன் அவை அலர்ஜி ஏற்படுத்துமா என சேதித்து பார்க்க வேண்டியது அவசியம்.

ஹேர் கலரில் சிறிதளவை எடுத்து காது ஓரத்தில் சிறுபகுதி முடியில் மட்டும் தடவி அலசுங்கள். 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும்  இல்லை என்றால் உபயோகியுங்கள்.
 
கவனிக்க வேண்டியவை:
 
ஹேர் கலர் செய்யப்படவிருக்கும் கூந்தல் பிசுபிசுப்போ, அழுக்கோ இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, கலரிங் செய்வதற்கு முன்பு ஹேர் வாஷ் செய்வது நல்லது. நீண்ட நேரம் ஹேர் கலரை தலையில் வைக்கக் கூடாது. ரசாயனப் பொருள்கள் உடலினுள் இறங்கும்  என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் கூந்தலை அலசிவிட வேண்டும்.
 
ஹேர் கலரிங் செய்து மூன்று நாள்கள் ஆன பிறகு எண்ணெய் உபயோகிக்கலாம். புருவ முடியிலும், இமைகளின் மேலும் கலரிங்கை  உபயோகிக்கக் கூடாது.
 
வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும். மருதாணி,  கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி  கருமையாக வளரும்.
 
மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும். ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.
 
கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா  சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.