செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சில எளிய பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள்...!

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால், உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். காலின் உள்பாகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் கண்ணுக்கு பொலிவு கிடைக்கும்.
ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும் முன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால்  கருவளையம் மறையும்.
 
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேத்து நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
 
முகத்தில் வளரும் பூனை முடிகளை போக்க, குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் மை போல் நன்றாக அரைத்து, இரவில் படுக்கும் முன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
 
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உஷ்ணமும் குறையும்.
 
குழந்தை பெற்ற பெண்கள், மூன்று மாதங்கள் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் குண்டாகும் வாய்ப்பு குறைந்து ஒல்லியாக இருக்கலாம்.
 
இளநரையை போக்க தலைமுடிக்கு வீரியமான ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்த்து, சீயக்காயை பயன்படுத்தலாம். அல்லது  நெல்லிக்காய்களுடன், எலுமிச்சம்பழச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரை  மறைந்துவிடும். முடி இதிர்வதும் கட்டுப்படும்.