திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (15:55 IST)

பொடுகு நீங்க இயற்கை முறையினால சில டிப்ஸ் !!

எலுமிச்சையை தோலோடு சாறு பிழிந்து வேர்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்து தலைக்குக் குளியுங்கள். தேன் : தேனில் கொஞ்சம் பூண்டுகளை தட்டிப் போட்டு ஊற வைத்து அதை வேர்களில் தடவி தலைக்குக் குளித்தால் பலன் கிடைக்கும்.


தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும். முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

தேங்காய் எண்ணெய் பொடுகுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து லேசாக சூடாக்கவும். இப்போது எண்ணெய் கொண்டு தலையை நன்றாக மசாஜ் செய்து சுமார் அரை மணி நேரம் வைத்திருந்த பின் தலையை அலசவும். இதனால் உங்கள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நிச்சயம் குறைக்கலாம்.

Edited by Sasikala