வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : சனி, 15 அக்டோபர் 2022 (13:12 IST)

தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Hair Problems
உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.


இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவுவதுடன் முடி உதிர்வதையும் தடுக்கும். அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிக மிக அவசியம். விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்

வைட்டமின் பி , வைட்டமின் இ மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும். தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். தினமும் தலைக்கு குளித்து தலையில் அழுக்கு தூசு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வில்வ மர இலையின் பொடி, எலுமிச்சை தோலை காய வைத்த பொடி, முருங்கை இலையின் காயவைத்த பொடி, வெட்டிவேர், ஹென்னா, கரிசலாங்கன்னி, செம்பருத்தி போன்ற பொடிகளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கற்றாழையுடன் சேர்த்து கலந்து பேஸ்டாக மாற்றி, எண்ணெய் தடவிய தலையில் பூசி, வெயில் காலத்தில் 30 நிமிடங்களும், மழைக்காலத்தில் 10 நிமிடங்கள் மட்டும் ஊற வைத்து தலைக்கு குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். பொடுகை நீக்கும் மருந்தை பயன்படுத்தி தலையை பொடுகு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.

Edited by Sasikala