வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:16 IST)

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Ponnanganni Keerai
பொன்னாங்கண்ணி கீரையை சமைக்கும் போது மிளகும், உப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.

பொன்னாங்கன்னி கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் வளமான அளவில் உள்ளது.

பொன்னாங்கன்னி கீரை ஆரோக்கியமான சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும்.

பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு வெகுவாக மேம்படும். மேலும் பொன்னாங்கன்னி கீரையை வாரம் இரணடு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது.

Edited by Sasikala