சாத்துக்குடி சாறு அருந்துவது உடலுக்கு இத்தனை நன்மைகளா !!
உடம்பு சரியில்லை என்றாலே பலரும் வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கக் கொடுப்பது சாத்துக்குடியைத்தான். 100 கிராம் சாத்துக்குடியில் 45 கலோரி, வைட்டமின் சி 35 மில்லி கிராம், வைட்டமின் ஏ 90.2 மைக்ரோ கிராம், நார்ச்சத்து 41.64 கிராம் அளவுக்கு உள்ளது.
சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சாதாரண சளி, ஃப்ளு பாதிப்பில் இருந்து நம்மை காக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் ஸ்கார்வி உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
சாத்துக்குடியில் அதிக நார்ச்சத்து கொண்டது என்பதால் மலச்சிக்கல், செரிமானக் குறைபாடுகளை நீக்குகிறது. சாத்துக்குடி ஜூஸ் நம் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பைத் தூண்டி செரிமானத்தை எளிமையாக்குகிறது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் வயிற்றுப்போக்கு பாதிப்பில் இருந்து மீள உதவுகிறது.
சாத்துக்குடி சாறு அருந்துவது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உடலில் நீரிழப்பால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து காக்கிறது.
சாத்துக்குடியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
மிகக் குறைந்த கலோரி கொண்டது என்பதால் உடல் எடை குறைய நினைப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். அல்லது பழத்தை சாப்பிடலாம். சாத்துக்குடி ஜூஸில் தேன் கலந்து சாப்பிடுவது உடலில் உள்ள அதிகப்படியான கலோரியை செலவு செய்ய உதவும்.