1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Snake Gourd to help control body weight !!

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் புடலங்காய் !!

Snake Gourd
புடலங்காயை பிஞ்சாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.


புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.

நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள் ஸ்புன் அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும். புடலங்காய் இலையானது குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!