செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (09:35 IST)

சிறுநீர்வழி தொற்றுக்களை நீக்கி சிறுநீர் பாதையை சுத்தமாக்கும் வாழைத்தண்டு !!

plantain stems
வாழைத்தண்டு சாறு சர்க்கரை நோய்க்கு சிறந்தது, வாழைத்தண்டில் உள்ள நார்சத்து இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.


வாழைத்தண்டு குறைந்த கிளைசெமிக்  இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் சர்க்கரை உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.

பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவது, தூக்கமின்மை, இரவில் மிக தாமதமாக சாப்பிடுவது, போன்ற பல்வேறு காரணங்களால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. வாழைத்தண்டு சாறு  உடலில் உள்ள அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் ஆகிவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் அமிலத்தன்மை மற்றும் அதனால் ஏற்படும் நெஞ்செரிச்சல் நீங்கும் . எப்போதும் வெறும் வயிற்றில் குடிப்பது பயனளிக்கும்.

வாழைத்தண்டில் ரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் வைட்டமின் பி‌6 உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிக்கும், இரத்த சோகை நீங்கும்.

வாழைத்தண்டு சாறு சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய சிறுநீர்வழி தொற்றுக்களை நீக்கி சிறுநீர் பாதையை சுத்தமாக்கும்.