வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் காதை குடைந்து அழுக்கை எடுப்பது நல்லதா...?

நாம் அன்றாடம் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு. நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள்  கூறுகின்றனர்.

 
னெனில், காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் ஆண்டி-பாக்டீரியா ஆகும். எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை குடைவதை  தவிர்க்க வேண்டும்.
 
நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் எனப்படும் ஆண்டி-பாக்டீரியல் என்சைம் ஆகும்.
 
உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே  போதுமானது.
 
சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள்  சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும், காதுக்குரும்பி எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு  போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.