வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:51 IST)

சாப்பிட்ட பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டுமா...?

Empty stomach - Water
மருத்துவர்களின் கூற்றுப்படி, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும், உணவுடன் அல்லது உடனடியாக தண்ணீர் குடிப்பதால் அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பவர்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


ஒரு சில உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடித்தால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.

சாப்பிடும்போது அருகில் கட்டாயம் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். தண்ணீர் நிறைய குடித்தால் சாப்பிட முடியாது என்றும் சாப்பிட்ட பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் சில சிக்கல்கள் உண்டாகக் கூடும். சாப்பிடும்போது தண்ணீர், ஜூஸ் குடிப்பதால் செரிமான சுழற்சியின் போது சுரக்கும் சில சுரப்பிகள் சுரக்காமல் போகலாம். அது செரிமானத்தை கடினமாக்கும்.

சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அது எடையைக் கூட்டி விடுமாம். ஏனென்றால் சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் இன்சுலின் அளவு அதிகரித்து செரிமான ஆற்றலை குறைத்து விடுமாம். செரிமான ஆற்றல் குறைவாக இருந்தாலே உடல் பருமன் ஏற்படும்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் மட்டும் இந்த பிரச்சினை உண்டாவதில்லை. ஜூஸ், சோடா என எல்லா வகை நீர் ஆகாரங்களும் இதில் அடங்கும். உணவு உட்கொள்ளும்போது இடையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உமழ்நீர் சுரப்பு குறைந்து ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது.