திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:35 IST)

தான்றிக்காயின் மருத்துவ பயன்கள் !!

Thandrikkai
தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்பும் கொண்ட சுவை கொண்டது. செரிமானத்தின் போது இனிப்பு சுவை கொண்டதாக மாறும். உஷ்ண குணம் கொண்டது. அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன்பாடு கொண்டவை.


தான்றிக்காய் பருப்பைத் தூள் செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து புண், ரணங்கள் மேல் பூசி வந்தால் புண்கள் ஆறும். தான்றிக்காயை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தைக் கொடுக்கும்.

தலை முடி புத்துணர்ச்சியுடன் வளர, மெலிந்த முடியை நன்கு வளரச்செய்யவும் முடி உதிர்த்தலை தடுக்கவும், பயன்படுகிறது. குரல் கரகரப்புக்கு மருந்தாகவும், குரல் வளத்தினை பெருக்கவும், ஆஸ்துமா மற்றும்  இரத்தத்துடன் கலந்து வரும் சளி, சாதாரண சளி இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

கொட்டையின் சதை பகுதி  வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. தான்றிக்காயானது தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.  தான்றிக் காயை தினம் உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

தான்றிக் காயின் சதைப் பகுதியானது மூல நோய், கை கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும். தான்றிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மற்றும் வறட்டு இருமல், மற்றும் அம்மை நோய் குணமாகும்.