வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பொடுகை நீக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். 
துளசி இலையை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். எலுமிச்சைச் சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பொடுகு நீங்கும். ஒருவர் உபயோகித்த சீப்பை அடுத்தவர் உபயோகிக்கக் கூடாது. 
 
3 தேக்கரண்டி கடலைமாவு, 3 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 1 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் ஒரு மாதத்தில் பொடுகு நீங்கும்.
 
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சரிசமாக கலந்து, துளசி இலை சேர்த்து சூடாக்கி, காய்ச்சி, ஆற வைத்து தினமும் தலையில் தடவ வேண்டும்.
 
ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.
 
சுத்தமான நல்லெண்ணையுடன் முழு நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை விழுதினை கொண்டு காய்ச்சி தயாரிக்கும் எண்ணெயைத் தேய்த்து குளிப்பதால் நரையை கட்டுப்படுத்தலாம்.