செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் ஆரோக்கியம் காக்கும் ஜூஸ் வகைகளை பார்ப்போம்....!

காரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, காரட் ஜூஸில் உள்ள அதிகபடியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படுவதோடு சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படும்.
 
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம்  கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
 
அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான  பிரச்சினைகள் தடுக்கப்படும்.
 
அரை கப் திராட்சை அதனுடன் சம அளவு ப்ரோக்கோலி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள், அத்துடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க ப்ரோக்கோலி சிறந்த இடத்தை வகிக்கிறது. 
 
திராட்சைக்கு பதிலாக பச்சை ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம். அதில் அதிகப்படியான பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் போஸ்பரஸ் ஆகியவை இருக்கிறது. இதனை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
 
கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை  ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு,  உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.