1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Red rice is high in protein !!

புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள சிவப்பு அரிசி !!

புரதச்சத்துக்கள்
சிவப்பு அரிசியானது சாதாரண அரிசியினைவிட விலை அதிகமானதாக உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள சத்துகளே. இதில் புட்டு, சாதம், கஞ்சி, களி எனப் பலரும் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிடுவதுண்டு.

சாதாரண வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது, அதனால்தான் அதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள்  சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஆனால் இதுவே சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.
 
சிவப்பு அரிசியில் அதிக அளவில் நார்ச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் ஆனது குறையும்.
 
சிவப்பு அரிசி புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இது எலும்புகளை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்ற  உள்ளது. மேலும் இது தசைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
 
சிவப்பு அரிசி தலைமுடி வளர்ச்சியினை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. மேலும் சிவப்பு அரிசியானது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி  செய்கிறது. 
 
சிவப்பு அரிசி கல்லீரல் இயக்கத்தினைச் சரிசெய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.
 
தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல்  பெறுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கத்தரிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!