எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் என இரண்டு வகைகள் உண்டு, இந்த எள் வகைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது கருப்பு எள்ளினைத் தான். அத்தகைய எள்ளில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
கருப்பு எள் மாதவிடாய் நின்ற பெண்களின் உடலினை வலிமைப்படுத்துவதாக உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு கால்சியமானது எலும்பு மற்றும் பல்லின் வலிமையினை அதிகரிப்பதாக உள்ளது.
எள் இதயத்தினை அனைத்து விதமான நோய்களில் இருந்து தற்காத்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் கருப்பு எள்ளினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலின் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
இரும்புச் சத்து அதிகரித்தால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான நுனி முடி வெடித்தல், இளநரை, முடி கொட்டுதல், செம்பட்டையான தலைமுடி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.
சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.