1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அத்தியாவசிய சத்துகள் நிறைந்து காணப்படும் கேழ்வரகு !!

சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு, ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு.

கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.
 
தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
 
இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது, 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.
 
மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது. கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
 
கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம், செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட வேண்டும். இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.
 
பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும், பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும். கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப்  போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
 
கேழ்வரகில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.