பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு !!
இது ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும். கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும்.
இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும். நாட்பட்ட வயிற்றுப் போக்கையும் நிறுத்தவல்லது. முக்கியமாக இது குழந்தைகளுக்கு மிக ஏற்றது. உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்.
கோரைக்கிழங்கை காயவைத்து தூள் செய்து கொண்டு அரை தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.
கோரை கிழங்கு பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. கோரை கிழங்குடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.
சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைகளை கோரை கிழங்கு சரி செய்கிறது.
கோரை கிழங்கு பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது. மேலும் வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.