வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (22:43 IST)

அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு அருமருந்தாகும் வெண்பூசணி !!

அதிக அளவு பிராணவாயு நிறைந்து காணப்படக்கூடிய வெள்ளை பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது உடம்புக்கு மிகுந்த நன்மை கொடுக்கிறது.

வெண்பூசணில் பொட்டாசியம் , கால்சியம் , மக்னீசியம் வைட்டமின் ஏ , டி , சி மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் நல்ல ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது. மேலும் வெண்பூசணி சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
 
பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது உடல் எடை குறைவதில்கூட எது பயன்படுத்தப்படுகிறது. 
 
வெண்பூசணி தோள்களை சீவி அதன் சாற்றுடன் தென் கலந்து காலையில் வெறும்வயிற்றில் கொடுத்து வர உடம்பிலுள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து நல்ல தீர்வை தருகிறது.
இது நீர்சத்து நிறைந்த காய்கறியாக கருதப்படுவதால் வெயில் காலங்களில் சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். 
 
அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு வெண்பூசணி ஒரு அருமருந்தாக விளங்குகிறது. மேலும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய சக்தி இதற்கு உள்ளதால் இதனை திருஷ்டிக்காக்க பயப்படுத்துகிறார்கள்.
 
செரிமானம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு அருந்திவர மிகவும் நல்லது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது. இதன் மூலமாக பல்வேறு தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.