திங்கள், 5 ஜனவரி 2026
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (18:12 IST)

மருத்துவ பலன்கள் ஏராளமாக உள்ள இலவங்கப்பட்டை !!

மருத்துவ பலன்கள் ஏராளமாக உள்ள இலவங்கப்பட்டை !!
இலவங்கப்பட்டை இலவங்கம் மரத்திலிருந்து எடுக்கப்படும் பட்டையாகும். நறுமணத்திற்க்காக சமையலில் சேர்க்கப்படுகிறது. இதில் மருத்துவ பலன்களும் ஏராளமாக உள்ளன.

தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் மேலும் முடி உதிர்வதையும் தடுக்கும்.
 
ஆலிவ் ஆயில் 50 மிலி அளவு எடுத்து சூடாக்கி இறக்கி வைத்து விட்டு அதில் தேன் ஒரு ஸ்பூன், இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கலக்கி சூடு ஆறியது தலையில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர வேண்டும். வாரம் ஒரு முறை இது போன்று செய்து வர முடி உதிர்வது நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
 
இரத்த கொதிப்பு இலவங்கப்பட்டையை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சேர்த்துக்கொள்ளலாம். இதில் கார்ப்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு, ஸ்டார்ச், புரேட்டீன், கலோரிகள், மினரல், கால்சியம், அயன், சோடியம், ஜிங்க், காப்பர், செலினியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
 
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நன்மை தரக்கூடிய கொழுப்பினை தருவதால் நெஞ்சு வலி வருவதில் இருந்து நம்மை காக்கிறது.
 
இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் நடுக்கம் நீங்கும். சிலருக்கு கண் துடிப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.