1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எண்ணற்ற பயன்களை கொண்ட மாதுளைச்சாறு !!

தினசரி மாதுளை சாறு குடிப்பது உடல் நோய்களிலிருந்து விலகி ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை விதைகளில் உள்ள நார்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல்  தடுக்கிறது.

எண்ணற்ற பயன்கள் கொண்ட மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தினமும் மாதுளை சாறு குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து அளவு அதிகரிக்கிறது.
 
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
 
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
 
தினமும் மாதுளை சாறு குடிப்பதால் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் அளவு அதிகரிக்கிறது. மாதுளை சாறு நம் உடலில் கொழுப்பு சேர அனுமதிக்காது.  மேலும்,  இது நம் உடலில் இயல்பான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.
 
தினமும் மாதுளை சாறு குடிப்பதால் நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மாதுளை சாறு குடிப்பது நமது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
 
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
 
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக்  குளிர்ச்சியையும் தரும்.