கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை ஜூஸ் !!

Curry leaf juice
Sasikala|
கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனைகள் இருந்தால் தான், உணவுகள் செரிமானமாகாமல் அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து, தொப்பையை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும். 

செரிமான பிரச்சனைகள் வந்தால், காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.
 
கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது ளியேற்றப்பட்டுவிட்டால்,  உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
 
பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், கறிவேப்பிலையை  காலையில் எழுந்ததும் சிறிது உட்கொண்டு வருவது நல்ல பலனை தரும்.
 
கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைவதோடு, அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடல்  எடையைக் குறைக்க உதவுகிறதாம்.
 
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்து வரலாம். இதனால் உடல் எடை குறைவதை காணலாம்.


இதில் மேலும் படிக்கவும் :