1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் அன்னாசி பழச்சாறு....!!

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அன்னாசிப் பழத்தில் அதிகமாக இருக்கிறது. அன்னாசிப் பழச்சாற்றுடன் தேன் கலந்து  40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு பக்க தலைவலி, வாய்ப்புண், மூளைக் கோளாறு, ஞாபக சக்திக் குறைவு போன்ற  பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக  இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும்.
 
பித்தத்தால் ஏற்படும் வாந்தி, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
 
உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
 
அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி2 உயிர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, இது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே. 
 
அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.