1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (17:04 IST)

முருங்கைக் கீரையின் பயன்கள்

இக்கீரையில்  வைட்டமின் சி மிகுந்திருப்பதால்  சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.
இக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு ஒளிஊட்டகூடியது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
மலசிக்கலை தடுக்கிறது. இக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும், இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது.
முருங்கை கீரை சிறுநீரைப் பெருக்க வல்லது.
 
தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும், மதர்ப்பும் கொடுக்கும்.
 
முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி, கை கால் அசதியும் யாவும் நீங்கும்.
 
முருங்கைக் கீரையை நெய்யில்  பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும் உண்டாகும். தாது விருத்தியும் உண்டாகும்.