1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (10:22 IST)

செரிமான மண்டலத்தை சரிசெய்ய உதவும் மிளகு !!

மிளகு உடலிற்கு அதிக சத்துக்களை தரக்கூடியது. அவை, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும், கரோட்டின், தயமின், ரியாஸின் போன்ற வைட்டமின்களும் அதிகமாக இருக்கிறது.


மிளகு நம் செரிமானத்தை சீர் செய்து குடலை வலுப்படுத்தி, வாயு தொல்லை, அஜீரணம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து காய்ச்சி காலை, மாலை என இருவேளை குடித்தால் ஜலதோஷம் குணமடையும்: ஜலதோஷத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும். பசியின்மையை போக்கும்.

நெஞ்சு சளியை போக்க 7 மிளகு, 1 வெத்தலை, ஒரு சிறிய துண்டு இஞ்சி இந்த மூன்றையும் இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து பிறகு குடித்தால் நஞ்சு சளியை போக்கும்.

மிளகு நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும். நெஞ்சு சளியை போக்கும்.

மிளகில் உள்ள கருப்பு மேல் தோலில் அதிகப்படியான பட்டோநியூட்ரியன்ஸ் இருக்கிறது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை உடைத்து எரிக்கும் தன்மை உள்ளது. அதிகப்படியான வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்கக்கூடியது. அதிகப்படியான நீர் உடலிலிருந்து வெளியேறுவதால் இதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடுகிறது.