1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:36 IST)

சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும் பழங்கள் !!

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகள் தரும். ஜூஸ் போட்ட பிறகு ஆரஞ்சு தோலை தூக்கி போட வேண்டாம். அதன் தோலை முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமம் பொலிவுடன் இருக்கும்.


அதிக சத்துக்களை கொண்டுள்ள மாதுளை சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது நல்லது.
ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. ஆப்பிளை மசித்து சிறிது தேன் கலந்து முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.

முகப்பரு உள்ளவர்களுக்கு பப்பாளி நல்ல தீர்வை தரும். சருமத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கிவிடும். பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஆப்ரிக்காட் சிறந்த பலனை தரும். இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்து அதில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.