வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தொண்டை சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் மிளகுத்தூள்...!!

வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால்
செரிமானத்தை சீராக்கும்.

 
மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சினை சரியாகும்.
 
மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும். தொண்டைக் கட்டு, பல் வலி போன்ற பிரச்சினை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்புளித்து வந்தால் நல்ல தீர்வு காண முடியும்.
 
ஈரல் நோய் எனப்படும் வைரல் ஹெப்படைடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடி செய்து கொண்டு,  காலை, மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
 
பொடுகு மற்றும் தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி, ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை தீரும் மற்றும் தலை முடியும் நன்கு வளரும்.