1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறு ஏற்றது என கூறப்படுவது ஏன்?

டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும்  உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல்  தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது.

 
சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர்.  இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது. பப்பாளி இலையில் இருக்கின்ற ஒரு வகை வேதிப்பொருள் டெங்கு  கிருமிகளை அழிப்பதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
டெங்கு எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருகிறது. இக்கிருமித் தொற்றுள்ள 'ஏடஸ் எஜிப்டி' எனும் கொசுக்கள் மக்களைக் கடிக்கும்போது டெங்கு பரவுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரையும் இது  தாக்கக்கூடியது.
 
பப்பாளி இலைச்சாறு இந்த நோய்க்குப் பலன் தருகிறது. இந்தச் சாற்றில் 7 வகை பீனால் சேர்மங்கள் இருக்கிறது. இவற்றில்  குவர்செட்டின் (Quercetin) எனும் ஃபிளவினாய்டு வகை வேதிப்பொருள் டெங்கு வைரஸ்களில் உள்ள NS2B, NS3 புரத  மூலக்கூறுகளை அழிக்கிறது என்று கண்டுபிடித்தோம். 
 
பப்பாளி இலை ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த இலையில் ஃபைட்டொ நியூண்ட்ரியண்டுகள் என்சைம் போன்ற  நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக  உள்ளது. எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
 
ரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
 
பப்பாளி இலையின் சாறு நமது உடம்பில் உள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல்,  புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
 
நமது உடலில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
 
அன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
 
வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி,  நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.